உலகையே உலுக்கும் இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் தொடங்கி 2 ஆண்டுகள் உருண்டோடி விட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே அக்டோபர் 7-ந் தேதி ஹமாஸ்நடத்திய தாக்குதலில் ஆயிரத்து 200 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். அதற்கு பதிலடியாக Nஇஸ்ரேல் தொடங்கிய தாக்குதல் பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகும் மூர்க்கத்தனமாக நீடித்து வருகிறது. இஸ்ரேலின் கொடூர முகம் காரணமாக இதுவரை 67 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. அதோடு, காசாவிலுள்ள சுமார் 92 சதவீத கட்டிடங்கள் இஸ்ரேலின் தாக்குதலில் சிதைந்து சின்னாபின்னமான நிலையில், இதுவரை இடிபாடுகள் மட்டும் சுமார் 50 மில்லியன் டன் கணக்கில் சேர்ந்திருப்பதாக கூறியுள்ள ஐ.நா., அந்த இடி பாடுகளை மொத்தமாக அப்புறப்படுத்தவே 22 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் என கணித்துள்ளது.