காசா மற்றும் லெபனானை தொடர்ந்து இஸ்ரேல் ராணுவம் சிரியாவிலும் தரைவழி தாக்குதலை தொடங்கியுள்ளது. மேலும், ஈரானுடன் தொடர்புடைய ஒருவரை சிறைபிடித்து அழைத்துச் செல்லும் வீடியோவையும் இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ளது. சிரியாவுக்குள் இஸ்ரேல் படைகளை அனுப்பியது இதுவே முதல் முறை என்ற நிலையில், தாக்குதல் தொடர்பான தகவலை சிரியா இன்னும் உறுதிப்படுத்தவில்லை.