போர்க்குற்ற நடவடிக்கையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை கைது செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு எதிராக அந்நாடு சர்வதேச நீதிமன்றத்தை நாடுகிறது. இஸ்ரேல் - ஹமாஸ் இடையே நாளுக்கு நாள் போர் தீவிரமாகி வரும் நிலையில், போர்க் குற்ற நடவடிக்கையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை கைது செய்ய குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது. கைது நடவடிக்கைக்கு எதிராக பல கண்டங்கள் எழுந்த நிலையில், இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் இஸ்ரேல் பிரதமர் தங்கள் நாட்டுக்குள் நுழைந்தால் கைது செய்யப்படுவார் என அறிவித்தன. இந்த நிலையில், அதிகார வரம்பை மீறி கைது வாரண்ட் பிறப்பித்திருப்பதாக இஸ்ரேல் சர்வதேச நீதிமன்றத்தை நாடுகிறது.