போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ள நிலையில் காஸாவில் இஸ்ரேல் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 30 பேர் கொல்லப்படடனர். பிரதமர் நேத்தன்யாகுவின் உத்தரவின் பேரில் இஸ்ரேல் ராணுவம் காசாவின் பல இடங்களில் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இறந்த பணயக்கைதிகளின் உடல்களை ஒப்படைக்க ஹமாஸ் தாமதித்து வருவதும் தாக்குதலுக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. இதனிடையே மோதல்கள் இருந்தாலும் போர் நிறுத்தம் நீடித்து வருவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.