ஹிஸ்புல்லா அமைப்பினரை ஒழிப்பதாக கூறி இதுவரை லெபனான் மீது வான்வழித் தாக்குதலை நடத்தி வந்த இஸ்ரேல், இப்போது அடுத்த கட்டமாக லெபனான் மீது தரைவழி தாக்குதலை துவக்கி உள்ளதாக அறிவித்துள்ளது. லெபனான்-இஸ்ரேல் எல்லையில் ஹிஸ்புல்லா அமைப்பினர் ஏற்படுத்தியுள்ள சுரங்கங்களுக்குள் இஸ்ரேலிய ராணுவம் ஏற்கனவே நுழைந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. தெற்கு லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினரால், வடக்கு இஸ்ரேலில் உள்ள மக்களுக்கு பெரும் அச்சுறுத்தல் உள்ளதால், தரைவழி தாக்குதலை துவக்குவதாக எக்ஸ் தளத்தில் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 1000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.