சிரியா, லெபனானுடன் தூதரக உறவுகளை மீட்டெடுக்க இஸ்ரேல் ஆர்வம் காட்டி வருகிறது. அதேசமயம், 1981-ஆம் ஆண்டு சிரியாவிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கோலன் குன்று பகுதியை திருப்பித் தரமாட்டோம் என்றும் நிபந்தனை விதித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சர் கீடான் சர், இது தொடர்பாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடந்த மே மாதம் சவுதி அரேபியாவில் சிரியா நாட்டு அதிபரை சந்தித்து பேசியதாகத் தெரிவித்தார். மேலும், தூதரக உறவுகளை மீட்டெடுப்பது தொடர்பாக சிரியாவின் புதிய அதிபர் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் இஸ்ரேல் பேச்சுவார்த்தை நடத்தியதும் தெரியவந்துள்ளது.