நீங்கள் எங்களை தாக்கினால் நாங்கள் உங்களை தாக்குவோம் என ஈரானுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார். ஐநா பொதுச்சபையில் பேசிய அவர், ஹிஸ்புல்லா போரின் பாதையைத் தேர்ந்தெடுக்கும் போது, இஸ்ரேலுக்கு வேறு வழியில்லை என்றார். மேலும் இந்த அச்சுறுத்தலை போக்கி இஸ்ரேலிய மக்களை பாதுகாக்க வேண்டியது தங்கள் பொறுப்பு என்றும் கூறினார்.