இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேமில் உள்ள பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. முகமையின் தலைமை அலுவலகத்தை அந்நாட்டு ராணுவம் இடித்து தரைமட்ட மாக்கியது.காசா மக்களுக்கு மனிதாபிமான உதவி வழங்கும் குழுக்கள் மீது அந்நாட்டு அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வரும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் ராணுவத்தின் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஐ.நா. முகமை, இந்தத் தாக்குதல் ஒரு குறிப்பிட்ட அமைப்பின் மீதானது மட்டுமல்லாமல், சர்வதேச விதிகளை மீறும் செயல் என்று தெரிவித்துள்ளது.இதையும் படியுங்கள் : ஐபிஎல் கிரிக்கெட் ஸ்பான்சராக கூகுள் ஜெமினி ஒப்பந்தம்