காசா மக்களை பட்டினியில் தள்ளிய இஸ்ரேலுக்கு கண்டனம் வலுத்து வருகிறது. ஹவுதி இயக்க ஆதரவாளர்கள் ஏராளமானோர் ஏமன் தலைநகர் சனாவில் உள்ள சபீன் சதுக்கத்தில் ஒன்று கூடி, காசா மக்களை பட்டினிக்கு தள்ளிய இஸ்ரேலை கண்டித்து போராட்டம் நடத்தினர். பேரணி சென்ற போராட்டக்காரர்கள் கையில் உள்ள ஆயுதங்களை அசைத்து காட்டி, காசாவுக்கு துணை நிற்பதாக கூறி முழக்கமிட்டனர்.