உக்ரைன், ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகள் பங்கேற்கும் முத்தரப்பு பேச்சுவார்த்தை இன்று அல்லது நாளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளதாக டாவோசில் டிரம்புடனான சந்திப்புக்கு பின் ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார். எந்தவொரு இறுதி அமைதி ஒப்பந்தத்திலும் உக்ரைனுக்கான அமெரிக்காவின் பாதுகாப்பு உத்தரவாதங்கள் இடம்பெற வேண்டும் என்று ஜெலென்ஸ்கி வலியுறுத்தினார். ரஷ்யாவுக்கு எதிராக பிரிட்டனும் பிரான்சும் தங்கள் படைகளை களத்தில் ஈடுபடுத்தத் தயாராக உள்ளதாக தெரிவித்த ஜெலன்ஸ்கி ஆனால் அமெரிக்கா இல்லாமல் எந்தவொரு பாதுகாப்பு உத்தரவாதமும் பலனளிக்காது என கூறினார். Related Link மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 14ஆவது போட்டி