அதிபராக இருந்த போது ஜோ பைடனின் உடல்நலம் மற்றும் மனநில குறித்த தகவல்கள் திட்டமிட்டே மறைக்கப்பட்டதா? என்பது குறித்த விசாரணைக்கு அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். பைடனின் உதவியாளர்கள் அவரது உடல் மற்றும் மனநலக் குறைபாட்டை மறைத்ததாகவும், அவர் சார்பாக முக்கிய முடிவுகளை பைடனின் உதவியாளர்கள் எடுத்ததாகவும், குடியரசுக் கட்சியினர் குற்றச்சாட்டிருந்தனர்.