அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக, ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை தாக்க ஈரான் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான ரகசிய பணிகளில் ஈரானின் ஆதரவு பெற்ற போராளி குழுக்கள் ஈடுபட்டு வருவதாக அமெரிக்க ராணுவ உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது என நியூ யார்க் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. குறிப்பாக லெபனானை தளமாக கொண்ட ஈரான் போராளி குழுக்கள் தாக்குதலை துவக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து மத்திய கிழக்கு நாடுகள் உள்ளிட்ட பல நாடுகளில் வசிக்கும் அமெரிக்கர்களுக்கு டிரம்ப் நிர்வாகம் பாதுகாப்பு அறிவுறுத்தல் விடுத்துள்ளது. இதையும் படியுங்கள் : பனி மலைகளில் குதூகலித்த சுற்றுலா பயணிகள்..