இஸ்ரேலுடனான போருக்கு பிறகு, ஈரான் உச்சபட்ச தலைவர் காமேனி முதல்முறையாக பொதுவெளியில் தோன்றியுள்ளார். சனிக்கிழமை தலைநகர் டெஹ்ரானில் நடைபெற்ற ஆஷூரா நோன்பு நிகழ்வில் காமேனி பங்கேற்ற காட்சிகள், ஈரான் அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்டது. முன்னதாக இஸ்ரேலுடன் நடைபெற்ற போரின் போது ஈரான் ராணுவத்தின் முக்கிய தளபதிகள், அணுசக்தி நிபுணர்கள் கொல்லப்பட்டதை அடுத்து, காமேனி பாதுகாப்பான இடத்தில் மறைந்திருப்பதாக கூறப்பட்டது. போர்நிறுத்தம் அமலான பிறகும் அவர் பொதுவெளியில் தோன்றாமல் இருந்து வந்த நிலையில், தற்போது முதல் முறையாக மத நிகழ்வில் பங்கேற்றுள்ளார்.