மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில் வளைகுடா நாடுகளுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.ஹிஸ்புல்லா தலைவரை கொலை செய்ததற்கு பழிவாங்கும் விதமாக ஈரான் நடத்திய வான்வழி தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் இஸ்ரேலின் பழிவாங்கும் படலத்துக்கு சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஜோர்டான் மற்றும் கத்தார் போன்ற வளைகுடா அரபு நாடுகள் தங்களின் வான்வழி மற்றும் ராணுவ தளங்களை பயன்படுத்த அனுமதித்தால் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், அதற்கான தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் ஈரான் எச்சரித்துள்ளது.