இறுதிச் சடங்கு ஒத்திவைப்பு : அமெரிக்கா - இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கு திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கமேனி மற்றும் ஈரானின் முக்கிய தலைவர்களுக்கு தலைநகர் தெஹ்ரானில் நேற்று மாலை அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம், தெஹ்ரான் உள்ளிட்ட நகரங்கள் மீதான தொடர் தாக்குதல்கள் ஆகியவற்றால் இறுதிச்சடங்கு ஒத்திவைக்கப்படுவதாகவும், புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் ஈரான் அரசு தெரிவித்துள்ளது. Related Link இந்திய தளங்களை பயன்படுத்தியதா அமெரிக்கா?