இஸ்ரேல் தாக்குதல் காரணமாக ஹார்முஸ் நீரிணை மூட ஈரான் முடிவு செய்துள்ளதால், கச்சா எண்ணெய் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தாக்குதல் நடத்தியதையடுத்து, உலக கச்சா எண்ணெய் போக்குவரத்திற்கு முக்கிய பங்காக உள்ள ஹார்முஸ் நீரிணை மூட ஈரான் நாடாளுமன்றம் அனுமதி அளித்துள்ளது. உலகம் முழுவதுக்குமான 20 சதவீத கச்சா எண்ணெய் இந்த நீரிணை வழியேதான் பல்வேறு பகுதிகளுக்கு கப்பலில் கொண்டு செல்லப்படுவதால், கச்சா எண்ணெய் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால், பெட்ரோல், டீசல் விலையும் உயர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.