உலகிலேயே முதன்முறையாக 10G இணைய சேவையை சீனா அறிமுகம் செய்துள்ளது. ஹூவாய் தொழில்நுட்ப நிறுவனம், சீனா யூனிகாம் தொலைத்தொடர்பு நிறுவனத்துடன் இணைந்து, ஹெபெய் மாகாணத்தின் சியோங்கான் நியூ என்ற பகுதியில் 10ஜி இணைய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் 2 மணி நேர திரைப்படத்தை இரண்டே நொடியில் பதிவிறக்கமும், 9864 Mbps வேகத்தில் பதிவேற்றமும் செய்யமுடியும் என கூறப்படுகிறது.