ரஷ்யாவுடனான போரை அடுத்த ஆண்டு தொடர உக்ரைனுக்கு சுமார் பத்து லட்சம் கோடி ரூபாய் தேவைப்படும் என அந்த நாட்டின் ராணுவ அமைச்சர் டென்னிஸ் ஷ்மெகர் தெரிவித்துள்ளார். ராய்ட்டரல்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் இதை தெரிவித்த அவர், போர் முடிவுக்கு வந்தாலும் உக்ரைனை நிலை நிறுத்த இந்த அளவுக்கு பணம் தேவைப்படும் என்றார்.