இஸ்கான் அமைப்பு ஒரு மத வகுப்புவாத அமைப்பு என்பதால் அதை தடை செய்ய வேண்டும் என வங்கதேச அரசு அங்குள்ள உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்து துறவி என கூறப்படும் சின்மயி கிருஷ்ண தாஸ் என்பவரை வங்கதேச அரசு கைது செய்து சிறையில் அடைத்த சம்பவத்திற்கு பெரும் எதிர்ப்பு உருவாகி உள்ள நிலையில், அடுத்த அதிரடியாக இஸ்கானை தடை செய்யும் முயற்சியில் வங்கதேச இடைக்கால அரசு இறங்கி உள்ளதாக கூறப்படுகிறது. வழக்கறிஞர் ஒருவர், இஸ்கானை தடை செய்ய வேண்டும் என தொடுத்த வழக்கில் வங்க தேச அரசின் கருத்தை உயர் நீதிமன்றம் கேட்டது. அதற்கு, இஸ்கான்அரசியல் கட்சி அல்ல என பதிலளித்த அரசு தலைமை வழக்கறிஞர், அது ஒரு அடிப்படைவாத மத அமைப்பு எனவும் கூறினார். இதை அடுத்து இஸ்கானை தடை செய்வது பற்றி அரசின் பதிலை தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.