இந்தியாவின் மிகப்பெரிய சூரியகாந்தி எண்ணெய் சப்ளையராக ரஷ்யா மாறியுள்ளது. 2021ம் ஆண்டில் வெறும் ஒரு லட்சத்து 75 ஆயிரம் டன்னாக இருந்த ரஷ்ய சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி, 2024ம் ஆண்டில் 20 லட்சத்து 90 ஆயிரம் டன்னாக அதிகரித்துள்ளது. மேலும் ரஷ்ய சூரியகாந்தி எண்ணெயின் இறக்குமதி நடப்பாண்டின் முதல் பாதி நிலவரப்படி, 6 லட்சத்து 80 ஆயிரம் டன்னாக உள்ளது.