சுவிஸ் வங்கியில் இந்திய பெருமுதலாளிகள் முதலீடு செய்த பணம் 2024 ஆம் ஆண்டில் மூன்று மடங்காக அதிகரித்து 37 ஆயிரத்து 600 கோடி ரூபாயாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டுகளை விட கணிசமான உயர்வு எனவும் சுவிட்சர்லாந்து மத்திய வங்கி தரவுகள் தெரிவிக்கின்றன. இந்தியர்களின் முதலீடு இந்த அளவுக்கு அதிகரித்திருப்பது 2021 ஆம் ஆண்டுக்குப் பிறகு இதுவே முதல் முறை என்றும், இது இந்திய அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வழக்கமான தரவு பகிர்வாக இருந்தாலும் வரி ஆய்வுக்கு உட்பட்டதாகவும் கூறப்படுகிறது.இதையும் படியுங்கள் : கத்தாரில் இருந்து போர் விமானங்களை அகற்றிய அமெரிக்கா..