இந்தியாவின் ஆதார் டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்தை, இங்கிலாந்தில் கொண்டுவர உள்ள 'பிரிட் கார்டு' திட்டத்திற்கான முன்மாதிரியாக பார்ப்பதாக அந்நாட்டு பிரதமர் கெய்ர் ஸ்டாமர் தெரிவித்துள்ளார். சமீபத்தில் இந்தியா வந்திருந்த அவர், இந்தியாவின் டிஜிட்டல் அடையாள திட்டமான ஆதாரை மிகப்பெரிய வெற்றி என பாராட்டினார்.