சவுதி அரேபியாவில் போலீசார் மற்றும் பணம் பறிக்கும் கும்பலுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் இந்திய இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டார். துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர் ஜார்க்கண்ட் மாநிலம் கிரிதி மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயது இளைஞரான விஜய் குமார் மஹதோ என்பதும் அவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்ததும் தெரிய வந்ததுள்ளது. கடந்த 16 நடந்த துப்பாக்கி சூட்டில் காயமடைந்தாக வாட்ஸ்அப்பில் வாய்ஸ் மேசேஜ் அனுப்பியிருந்த மஹதோ சிகிச்சை பலனின்றி 24 ம் தேதி உயிரிழந்தாக கூறப்படுகிறது.