கனடாவில் புகழ்பெற்ற பஞ்சாபி பாடகர் சன்னி நாட்டனின் (( Channi Nattan )) வீட்டின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டிற்கு பிரபல ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய் ((Lawrence Bishnoi ))யின் கும்பல் பொறுப்பேற்றுள்ளது. பாடகர் சன்னி நாட்டனின் வீட்டிற்கு வெளியே நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிர் சேதம் தவிர்க்கப்பட்ட நிலையில், தாக்குதல் வீடியோவையும் ரவுடி கும்பல் வெளியிட்டுள்ளது. பாடகர் சன்னி நாட்டன் சக பாடகர் சர்தார் கெராவுடன் ((Saradar Khera))நெருக்கமாக இருந்ததால் தாக்குதல் நடத்தப்பட்டதாக லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் தெரிவித்துள்ளது.