வரி ஏய்ப்பு செய்யும் அதிபர் டிரம்ப் போன்றவர்களின் அடாவடித்தனத்திற்கு முற்றுப் புள்ளி வைப்பேன் என நியூ யார்க் நகரின் புதிய மேயராக தேர்வாகி உள்ள இந்திய வம்சாவளியினரான ஜொஹ்ரான் மம்தானி தெரிவித்துள்ளார். வெற்றி பெற்ற பின் தமது ஆதரவாளர்களின் பெரும் ஆரவாரத்திற்கு இடையே பேசிய அவர் டிரம்புக்கு நேரடியான சவாலை விடுத்தார். நியூ யார்க்கை அடக்கி ஆண்ட ஒரு அரசியல் சாம்ராஜ்யத்தை தாம் வீழ்த்தி விட்டதாக அவர் கூறினார்.தமது வெற்றி ,ஒரு புதிய மாற்றத்திற்கான மக்களின் தீர்ப்பு என்ற மம்தானி, நியூ யார்க்கில் வாடகை கட்டுப்பாட்டு சட்டம், குழந்தைகள் நலன், குடியிருப்பு வசதிகள் உள்ளிட்டவற்றின் மீது கவனம் செலுத்தப்படும் என கூறினார். மம்தானி வெற்றி பெற்றால் அது நியூ யார்க்கின் அழிவு காலமாக இருக்கும் என டிரம்ப் கூறியதற்கு, தம்மை கடந்து டிரம்பால் எதுவும் செய்ய இயலாது என்றார். நியூ யார்க் மேயராக வரும் ஜனவரி ஒன்றாம் தேதி மம்தானி பொறுப்பு ஏற்பார்.