அமெரிக்காவில் இந்திய பல் மருத்துவ மாணவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த சந்திரசேகர் பொலே, இளநிலை பல் மருத்துவம் படித்துவிட்டு, 2023-ஆம் ஆண்டு அமெரிக்கா சென்று டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் முதுநிலை பல் மருத்துவம் படித்து வந்தார். மேலும், பகுதி நேரமாக டெல்லஸ் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் வேலை செய்து வந்த நிலையில், பங்குக்கு சென்ற மர்ம நபர், சந்திரசேகரை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுவிட்டு தப்பிச் சென்றார். இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், அவரது உடலை இந்தியாவுக்கு கொண்டுவர வெளியுறவுத்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.