ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா விரைவில் நிறுத்தும் என பிரதமர் மோடி தன்னிடம் உறுதியளித்ததாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பொருளாதார ரீதியாக மாஸ்கோவை தனிமைப்படுத்துவதற்கான பெரிய நகர்வு இது என தெரிவித்தார். மேலும், ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதில், தான் மகிழ்ச்சியடையவில்லை எனவும், இதே காரியத்தை சீனாவையும் செய்ய வைக்கப் போவதாகவும் அவர் கூறினார்.