ஈரான்- இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக ரஷியா, அமெரிக்காவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா அதிகரித்துள்ளது. 2 நாடுகளுக்கும் இடையிலான மோதல் அதிகரித்து வரும் நிலையில், எண்ணெய் ஏற்றுமதிக்கு முக்கிய போக்குவரத்து பாதையாக இருக்கும் ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக ஈரான் அச்சுறுத்தியுள்ளது. இந்த பாதை வழியாகத்தான் இந்தியா தனது அனைத்து எண்ணெய், எரிவாயுவை இறக்குமதி செய்கிறது. மத்திய கிழக்கில் ஏற்பட்ட மோதல் இதுவரை எண்ணெய் வினியோகத்தை பாதிக்கவில்லை என்றாலும், ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் கப்பல் உரிமையாளர்கள் வளைகுடாவுக்கு காலி டேங்கர்களை அனுப்ப தயங்குவதாக கூறப்படுகிறது. இதையும் படியுங்கள் : ஈரான்- இஸ்ரேல் தாக்குதல் எதிரொலி ஹார்முஸ் நீரிணை மூட ஈரான் முடிவு..!