லண்டன் டாவிஸ்டாக் சதுக்கத்தில் ((Tavistock Square))உள்ள காந்தியடிகளின் சிலை அவமரியாதை செய்யப்பட்டதற்கு இந்திய தூதரகம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. டாவிஸ்டாக் சதுக்கத்தில் தியான நிலையில் காந்தியின் சிலை அமைக்கப்பட்டுள்ள நிலையில், இங்கு அக்டோபர் 2 ஆம் தேதி ஆண்டுதோறும் காந்தி ஜெயந்தி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தி உள்ளனர். இது வெட்கக்கேடானது என கூறியுள்ள இந்திய தூதரகம் சமூக விரோத கும்பலை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி உள்ளது.இதையும் படியுங்கள் : எஃப்சி தலைமையகத்திற்கு அருகே நடந்த குண்டுவெடிப்பு குண்டு வெடிப்பில் 5 பேர் உயிரிழப்பு - 19 பேர் காயம்