ரஷ்யாவின் டாப் எண்ணெய் நிறுவனங்களான Rosneft மற்றும் Lukoil ஆகியவற்றின் மீது அமெரிக்கா புதிய பொருளாதார தடைகளை விதித்ததை தொடர்ந்து, அவற்றிடம் இருந்து வாங்கும் கச்சா எண்ணெயின் அளவை குறைத்துக் கொள்ள இந்தியா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதை போன்று பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களான ஐஓசி, BPCL, HPCL ஆகியனவும் ரஷ்ய நிறுவனங்களிடம் இருந்து நேரடியாக கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த உள்ளதாக கூறப்படுகிறது.