இந்தியா-அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டு விட்டதாக, அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் தெரிவித்தார். நான்கு நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள அவர், பிரதமர் மோடியுடனான சந்திப்பிற்கு பிறகு ஜெய்ப்பூரில் உள்ள மாநாட்டில் கலந்து கொண்டார். இந்த ஒப்பந்தங்கள் அதிபர் டிரம்ப் மற்றும் பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையை நனவாக்குவதற்கான ஒரு முக்கியமான படி என்று நம்புவதாகவும், இந்தியா அமெரிக்கா இடையேயான எதிர்கால உறவுக்கு இது சிறந்த அடித்தளமாக அமையும் என்று நினைப்பதாகவும் கூறினார்.