இளைஞர்களின் போராட்டத்தால் வன்முறை வெடித்த நேபாளத்தில் மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வருவதால், தலைநகர் காத்மண்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் அமலில் இருந்த ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக மூடப்பட்டிருந்த கடைகள், வணிக வளாகங்கள், காய்கறி சந்தைகள் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில், சாலைகளில் போக்குவரத்தும் தொடங்கியது.