அமெரிக்க நாடாளுமன்றத்தில் அதிபர் டிரம்ப்புக்கு எதிரான பதவி நீக்க தீர்மானம் நிராகரிக்கப்பட்டது. டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த ஜனநாயக கட்சி எம்.பி.யான அல் கிரீன் என்பவர் கொண்டு வந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில், 47 எம்பிக்கள் ஆதரவு தெரிவித்த நிலையில், 140 எம்.பி.க்கள் எதிராக வாக்களித்ததால் தீர்மானம் நிராகரிக்கப்பட்டது.