இஸ்ரேலுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்ட உடனே, ஈரானுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் மீதான ஈரான் ஏவுகணை தாக்குதலை உலக நாடுகளே கண்டித்த போதும், ஐ.நா.பொதுச்செயலாளர் மவுனம் காத்தார். ஆகையால் அவருக்கு இஸ்ரேல் மண்ணில் கால் வைக்க தகுதி கிடையாது என அந்நாட்டு அரசு காட்டமாக தெரிவித்துள்ளது.