அதிபர் தேர்தலில் தாம் வெற்றிபெறவில்லை என்றால் இந்த உலகில் இருந்தே இஸ்ரேல் என்ற நாடு துடைத்து எறியப்பட்டு விடும் என குடியரசுக்கட்சி வேட்பாளரும் முன்னாள் அதிபருமான டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்காவில் யூத மத எதிர்ப்பு குறித்து வாஷிங்டனில் நடந்த கூட்டத்தில் பேசிய அவர், அமெரிக்க அதிபர் தேர்தல் என்பது இஸ்ரேலை காப்பாற்றுவதற்கான தேர்தல் என கூறி யூத அமெரிக்கர்களின் வாக்குகளை கவர முயன்றார்.கருத்துக்கணிப்பு ஒன்றின் படி அமெரிக்க யூதர்களில் 40 சதவிகிதம் பேர் மட்டுமே டிரம்பை ஆதரிப்பது தெரிய வந்துள்ளது. இதை அடுத்து யூதர்களின் வாக்குகளை திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ள டிரம்ப், ஜனநாயக கட்சி வேட்பாளரான கமலா ஹாரிஸ், அமெரிக்காவில் யூத எதிர்ப்பு அலைகளை உருவாக்குவதாக தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார்.