அமெரிக்காவின் ஃபுளோரிடாவை நோக்கி மில்டன் சூறாவளி நகர்ந்து செல்லும் நிலையில், சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பதிவான பிரம்மாண்ட காட்சிகள் வெளியாகியுள்ளன. மில்டன் சூறாவளி ஃபுளோரிடாவை தாக்கும் என தொடர்ந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில், ஃபுளோரிடாவை நோக்கி நகர்ந்த பிரம்மாண்ட காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. இதனிடையே மில்டன் சூறாவளி காரணமாக ஃபுளோரிடாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.