இஸ்ரேலின் எலியட் நகரில் உள்ள ரமொன் விமான நிலையத்தை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் டிரோன் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் நடைபெற்று வரும் நிலையில், ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஆதரவாக ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செயல்பட்டு வருகின்றனர். இதனிடையே விமான நிலையத்தை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் டிரோன் தாக்குதல் நடத்திய நிலையில், அதனை இஸ்ரேல் வான் பாதுகாப்பு அமைப்பு முறியடித்தது. இதில் ஒரு டிரோன் விமான நிலையம் மீது மோதி வெடித்தததாக தெரிகிறது.