செங்கடல் மற்றும் இந்திய பெருங்கடலில் இரண்டு கப்பல்கள் மீது, ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் குழு தாக்குதல் நடத்தியதாக ஹவுதி ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். குறிப்பாக அமெரிக்க எண்ணெய் கப்பல் மீது 11 பாலிஸ்டிக் ஏவுகணைகள், இரண்டு ட்ரோன்கள் வீசப்பட்டதால் பதற்றம் நிலவி வருகிறது.