இஸ்ரேல் மிரட்டலுக்கு ஒருபோதும் அடிப்பணிய மாட்டோம் என ஹிஸ்புல்லா தலைவர் நயீம் காசிம் திட்டவட்டமாக கூறினார்.மேலும் இஸ்ரேலால் கைது செய்யப்பட்ட மக்களை விடுவிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.மொஹரம் பண்டிக்கையை ஒட்டி ஹிஸ்புல்லாவின் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய அவர், வான்வழி தாக்குதல்களை இஸ்ரேல் முடித்துக்கொண்டு தெற்கு லெபனானை விட்டு வெளியேறும் வரை தங்கள் ஆயுதங்களை கீழே போட மாட்டோம் என சூளுரைத்தார்.