மத்திய அமெரிக்காவில் பல்வேறு பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. டல்லாஸ், கன்சாஸ் மற்றும் மிசோரி ஆகிய பகுதிகளில் பெய்த கனமழையால் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. மேலும் சாலையில் நிறுத்தப்பட்ட வாகனங்களும் நீரில் மிதந்ததாக தெரிகிறது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற மீட்புப்படையினர் மழைநீரில் சிக்கியவர்களை படகு மூலம் பத்திரமாக மீட்டனர்.