மில்டன் சூறாவளி நெருங்குவதை முன்னிட்டு, அமெரிக்காவின் புளோரிடா கடற்கரையில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது. காற்றில் மின் கம்பங்கள் சாய்ந்து சேதமடைந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதால் சாலைகள் மற்றும் கடற்கரைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.