ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டது, அமெரிக்கர்கள் உட்பட அவரால் பாதிக்கப்பட்ட பலருக்கு நீதி கிடைத்ததற்கான நடவடிக்கை என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் 40 ஆண்டுக் கால பயங்கரவாத ஆட்சியில் நூற்றுக்கணக்கான அமெரிக்கர்களைக் கொன்றதற்கு ஹசன் நஸ்ரல்லாவும் அவர் தலைமையிலான ஹிஸ்புல்லாவும் பொறுப்பேற்றனர் என குறிப்பிட்டுள்ளார்.