அமெரிக்காவை சேர்ந்த மல்யுத்த வீரரும், நடிகருமான ஜான் சீனா தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், உலகம் முழுவதும் உள்ள அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார். WWE மல்யுத்த போட்டிகளில் அனைவரது கவனத்தையும் ஈர்த்து உலகெங்கிலும் ரசிகர்களை கொண்ட ஜான் சீனா, களத்திற்குள் என்ட்ரி கொடுக்கும் ஸ்டைலே மிகவும் பிரபலமாகும். 16 முறை WWE சாம்பியன் பட்டம் வென்றுள்ள ஜான் சீனா, மல்யுத்த போட்டிகள் மட்டுமின்றி பல ஹாலிவுட் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.