தொழில்நுட்ப காரணங்களால் சர்வதேச விண்வெளி நிலையத்தில் நீண்ட நாள் தங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்ட நாசா விஞ்ஞானியும், இந்திய வம்சாவளியினருமான சுனிதா வில்லியம்ஸ் அங்கிருந்தவாறே தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டுள்ளார். அந்த வீடியோ செய்தியில், ISS ல் இருந்து வாழ்த்துகளை தெரிவிப்பதாகவும், வெள்ளை மாளிகை மற்றும் உலகின் பல நாடுகளில் உள்ளவர்களுக்கு இனிய தீபாவளி வாழ்த்துகளை தெரிவிப்பதாகவும் சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் நடந்த தீபாவளி கொண்டாட்டத்தில் சுனிதா வில்லியம்சின் இந்த வீடியோ ஒளிபரப்ப ப்பட்டது.