இஸ்ரேல் மீதான அக்டோபர் 7 தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட யாஹ்யா சின்வார் ((Yahya Sinwar)) உயிருடன் இருப்பதாக இஸ்ரேலிய ஊடகம் தெரிவித்துள்ளது. ஹமாஸ் அமைப்பின் தலைவராக இருந்த இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டதற்கு பிறகு கடந்த ஆகஸ்டில் அந்த அமைப்பின் தலைவராக யாஹ்யா சின்வார் பதவியேற்றார். இவர் கடந்த செப்டம்பர் 21ம் தேதி நடந்த இஸ்ரேலிய தாக்குதல்களில் கொல்லப்பட்டதாகக் கருதப்பட்ட நிலையில், அவர் உயிருடன் இருப்பதாகவும், கத்தாருடன் ரகசிய தொடர்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளதாகவும் இஸ்ரேலிய ஊடகமான தி ஜெருசலேம் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் இந்த செய்தியை மறுத்துள்ள கத்தார் தூதர், ஹமாஸின் மூத்த நபரான கலீல் அல்-ஹயா ((Khalil al-Hayah)) உடன் மட்டுமே தங்களுக்கு தொடர்பு உள்ளதாக தெரிவித்துள்ளார்.