தனது யூடியூப் கணக்கு இடைநிறுத்தப்பட்டது தொடர்பாக அதிபர் டிரம்ப் தொடர்ந்த வழக்கில் கூகிளின் யூடியூப் 24.5 மில்லியன் டாலரை அவருக்கு செலுத்த உள்ளது. 2021 ம் தேர்தலின் போது டிரம்ப் யூடியூப் விதிகளை மீறி அவரது பக்கத்தில் தேர்தல் தொடர்பாக தவறான தகவல்களை வெளியிட்டதற்காக அவரது கணக்கு முடக்கப்பட்டது. இதனை எதிர்த்து டிரம்ப் தொடர்ந்த வழக்கு கலிபோர்னியாவில் உள்ள ஃபெடரல் நீதிமன்றத்தில் வரும் 6 ம் தேதி விசாரணைக்கு வர உள்ள நிலையில் தீர்வு குறித்த வெளியீடு வந்ததுள்ளது. இதேபோன்றே வழக்கை தீர்க்க மெட்டா மற்றும் மஸ்க்கின் எக்ஸ் தளம் ஒப்புக்கொண்டது குறிப்பிடதக்கது.