அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கிட வேண்டும் என பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி அசிம் முனீர் பரிந்துரைத்துள்ளார். அமெரிக்க ராணுவ அணிவகுப்பில் சிறப்பு விருந்தினராக அசிம் முனீர் பங்கேற்ற நிலையில், அவருக்கு அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் விருந்தளித்தார். அப்போது பேசிய அசிம் முனீர், இந்தியா பாகிஸ்தான் இடையே ஏற்படவிருந்த அணு ஆயுத போரை டிரம்ப் தனது சாமார்த்தியத்தால் தடுத்து நிறுத்தியதாக புகழாரம் சூட்டினார்.இதையும் படியுங்கள் : ”தக்லைப்” திரைப்படத்தை திரையிடும் திரையரங்குகள்.. பாதுகாப்பு வழங்கப்படும் என கர்நாடக அரசு உறுதி