அமெரிக்காவின் ஜார்ஜியாவில் உள்ள உயர்நிலை பள்ளியில், 14 வயது மாணவன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், 2 ஆசிரியர்கள், 2 மாணவர்கள் என 4 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 9 பேர் காயமடைந்தனர். தகவலறிந்து வந்த போலீசார், துப்பாக்கிச்சூடு நடத்திய மாணவனை கைது செய்தனர். கைதான மாணவன் கடந்த ஆண்டே பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்போவதாக ஆன்லைன் மூலம் மிரட்டல் விடுத்தது தொடர்பாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவன் என்பது FBI அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது. பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள அதிபர் ஜோ பைடன், துப்பாக்கி பயன்பாட்டுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார். அதேபோல் துணை அதிபர் கமலா ஹாரிஸ், முன்னாள் அதிபர் ட்ரம்ப் ஆகியோரும் இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.