காஸா அமைதி திட்டத்திற்கு இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு ஒப்புதல் அளித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். பாலஸ்தீனத்திற்கு எதிரான போர் நிறுத்தம், இஸ்ரேல் படைகள் வாபஸ், பிணை கைதிகள் விடுவிப்பு உள்ளிட்டவை அடங்கிய காஸா போர் நிறுத்தத்துக்கான 20 நிபந்தனைகள் அடங்கிய விரிவான திட்டத்தை டிரம்ப் வகுத்துள்ளார். வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்புடன் நடந்த சந்திப்பில் நேதன்யாகு இதனை ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், திட்டத்தை சீராய்வு செய்து முடிவை தெரிவிப்பதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.