காசாவில் நிரந்தர போர் நிறுத்தம் கோரும் ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானத்தை தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அமெரிக்கா ரத்து செய்தது. காசாவில் மனிதாபிமான நிலைமைகள் மிகவும் மோசமடைந்து வருவதால், ஐநா பாதுகாப்பு கவுன்சிலில், உடனடி மற்றும் நிரந்தர போர் நிறுத்த தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதற்கு பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள 14 நாடுகள் ஆதரவு தெரிவித்த நிலையில், தீர்மானத்திற்கு எதிராக அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியது. ஹமாஸ் அமைப்பு ஆயுதங்களை கைவிட தவறியதை காரணம் காட்டி தீர்மானத்திற்கு எதிராக அமெரிக்கா வாக்களித்தது. காசாவில் அமைதி திரும்ப உலகளாவிய ஒருமித்த கருத்து உருவான நிலையில், அதற்கு அமெரிக்க முட்டுக்கட்டை போட்டுள்ளது.